திருச்சி பாய்லர் தொழிற்சாலையில் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் திருச்சி கண்காட்சி இன்றிலிருந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. முதல்நாள் நாளான இன்று காலை பெல் தொழிற்சாலையில் முக்கியப் பொறுப்பில் உள்ள பாலசுப்ரமணியன் என்பவர் திறந்து வைத்தார்.
இந்தப் புத்தககண்காட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான பதிப்பாளர்கள் புத்தங்களை விற்பனை செய்து வந்தனர். இங்கே தீடீர் என இன்று மாலை ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களும் பெல் தொழிலாளர் சிலரும் வந்து கண்காட்சியில் ''கிதியோன் இண்டர்நேனஷல்'' என்கிற புத்தகக் கடையில் பைபில் இலவசமா கொடுத்துக் கொண்டிருந்தபோது உள்ளே புகுந்து அத்துமீறி எடுத்து சென்றனர். புத்தகக் கண்காட்சிக்குள் புகுந்து பைபில் பறித்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
நமக்கு விசயம் கேள்விப்பட்டவுடன் நாம் சம்பவ இடத்திற்குச் சென்ற போது.. போது. அங்கே பாய்லர் தொழிற்சாலை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகச் சுந்தரம் தலைமையில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அவர்களுக்கு ஆதரவாக வந்தவர்களுடன் முத்தமிழ் மன்ற நிர்வாகிகள் ஆகியோருடம் பேச்சு வார்த்தை நடத்தி பைபிள் கொடுத்து மதமாற்றம் செய்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டும் என்று பேசி கடைசியில் பைபிள் கொடுத்த கடையைக் கண்காட்சியின் முதல்நாளான இன்றோடு காலி செய்து அனுப்பி வைத்தனர்.
பெல் நிர்வாகமும் இந்தப் பிரச்சனையைப் பெரிது படுத்த வேண்டாம் என்று பைபிள் கடை நடத்தியவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றினார்கள். பைபிள் கடையை நடத்தியவரிடம் நாம் பேசிய போது. நாங்கள் எல்லாக் கண்காட்சியில் எங்கள் நிறுவனத்தின் சார்பில் பைபிள் நான்கு வகையான மொழிகளில் அச்சிட்டு கேட்பவர்களுக்கு இலவசமா கொடுக்கிறோம். யாருக்கும் கட்டாயப்படுத்திக் கொடுப்பதில்லை. முறைப்படி அனுமதி பெற்றே நடத்தினோம். ஆனால் அந்த அமைப்பபை சேர்ந்தவர்கள் அராஜகமாக வந்து பைபிள்களை அள்ளி சென்றனர். பாய்லர் தொழிற்சாலை நிர்வாகமும் அவர்களுக்குத் துணையாகக் கடையைக் காலி பண்ண சொன்னதால் நாங்கள் மேலும் பிரச்சனையைப் பெரிது பண்ண வேண்டாம் என்று கடையைக் காலி செய்கிறோம் என்றார்.
பெல் முத்தமிழ் மன்றத்துடன் இணைந்து புத்தககண்காட்சியை ஒருங்கிணைந்து நடத்தும் கௌரா பதிப்பக ராஜசேகரிடம் பேசினோம். 10 வருடங்களுக்கு முன்பு இங்கே புத்தககண்காட்சி நடத்தினோம். அதன் பிறகு இந்த மன்றத்தின் சார்பில் விரும்பி கேட்டதால் தான் நடத்துகிறோம் 70,000 ரூபாய்க்கு மேல் கண்காட்சிக்கு விளம்பரம் செய்துதான் இங்கே நடத்துகிறோம். எல்லோரும் வியாபாரிகள் யாரும் மதம் மாற்றம் பண்ண வரவில்லை. அவர்கள் கேட்பவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறார்கள். அவ்வளவுதான். எங்கள் பதிப்பத்தில் கூடத் திருவாசம், தேம்பாவணி, திருமந்திரம், என எல்லாம் மலிவு விலையில் 50 சதவீத தள்ளுடியில் கொடுக்கிறோம். நாளைக்கு எங்களை எப்படி இப்படி விற்கிறார் என்று கேட்டால் என்னா ஆவது. இது முற்றிலும் தவறான செயல். ஒருவேளை அந்தக் கிறிஸ்தவப் புத்தகக் கடைக்காரர் எடுக்கமாட்டேன் என்று சொல்லியிருந்தால் நாங்கள் அவருக்குத் தான் துணையாக இருந்திருப்போம். இது முற்றிலும் தவறான முன் உதாரணம். காவல்துறையும் பிரச்சனை பண்ணினவர்களைச் சமாதானப்படுத்தும் நோக்கில் கடையை காலி பண்ண வைப்பது தவறான முன் உதாராணம் என்றார்.
பெல் தொழிற்சாலையில் வேலையும் மூத்த ஊழியர் ஒருவர் நம்மிடம்..
பெல் தொழிற்சாலையை 1000 ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கும் அந்த இடத்தில் எத்தனையோ புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்று இருக்கிறது. யாரையும் கட்டாயப்படுத்திக் கொடுப்பதும் இல்லை, இதுவரைக்கு வராத பிரச்சனை தற்போது ஆராஜகமாக உள்ளே புகுந்து மதமாற்றம் செய்கிறார்கள் என்று கட்டாயப்படுத்தி அவர்களைத் திட்டமிட்டு காலி செய்து விரட்டியதன் மூலம் பெல் தொழிலாளர்கள் மத்தியில் பெரிய பிளவை விதைக்கிறார்ளோ என்கிற பயம் எனக்கு இருக்கிறார்.
-வசனநிலா