விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நான்குமுனைப் போட்டி நிலவி வருவதால், வாக்காளர்களுக்கு தலா ரூ. 2,000 வீதம் விலை நிர்ணயித்து பண விநியோகத்தைத் துவக்கியுள்ளனர் தொகுதிக்குட்பட்ட அதிமுகவினர்.
வருகின்ற 18ம் தேதி நடைபெறுகின்ற தேர்தலில் விளாத்திக்குளம் சட்டமன்றத் தேர்தலும் ஒன்று. அதிமுக சார்பில் சின்னப்பன், திமுக சார்பில் ஜெயக்குமார், அமமுக சார்பில் ஜோதிமணி மற்றும் சுயேச்சையாக முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனும் வேட்பாளராக களத்தில் உள்ளனர். இதில் அதிமுகவிலிருந்து பிரிந்து தனிப்பட்ட செல்வாக்குடன், சுயேச்சையாக களமிறங்கியுள்ள மார்க்கண்டேயேன் வாங்கும் ஒவ்வொரு வாக்கும் தனக்கு இழுக்கு எனக் கருதும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொகுதியிலேயே முகாமிட்டு, சுயேச்சை வேட்பாளர் மார்க்கண்டேயனின் வாக்கு வங்கியை குறிவைத்து வாக்கு சேகரித்து வருகின்றார்.
இதற்காக, தொகுதி முழுவதும் ஒவ்வொரு வாக்குகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் விலைக் கொடுத்து வருவது பரப்பரப்பை உருவாக்கியுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு விபரம் தெரிந்தும் மௌனமாக இருக்கிறது என பொது மக்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.