திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூரில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டுக்கு அரசு போக்கு வரத்து துறையில் இருந்து 70 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் வசூலான தொகை 11 லட்சத்து 50 ஆயிரம். இந்த பணத்தை சென்னையில் இருந்து திருச்சி போக்குவரத்து கழகஅலுவலகத்திற்க்கு கொண்டு வரும் பணிக்கு பெரம்பலூர் கிளை மேலாளர் செந்தில்குமார், ஊழியர்கள் ரகுபதி, பழனி முருகன், ஆனந்த குமார் ஆகியோர்நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் நேற்று இரவு 2.30 மணியளவில் பணப்பெட்டியுடன் சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும்அரசு சொகுசு பஸ்சில் புறப்பட்டனர். அந்த பஸ் இன்று காலை 8 மணியளவில் பெரம்லூர் பஸ் நிலையம் வந்து நின்றது. அப்போது மேற்படி ஊழியர்கள் பணப்பெட்டியை பார்த்தபோது அதை காணவில்லை திடுக்கிட்டனர். உடனே பெரம்பலூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. டிஎஸ்பி ரவீந்திரன் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையிலான டீம்பஸ் நிலையத்திற்கு பறந்துவந்து விசாரணை மேற்க்கொண்டனர். பஸ்சில் பயணம் செய்த பயணிகள் யாராவது பணத்தை திருடி சென்றனரா அல்லது பணம் எடுத்து வந்த ஊழியர்களே பணம் திருட்டு போனதாக நாடகமாடுகிறார்களா? பணப் பெட்டி எப்படி மாயமாகிபோனது என்பதை பற்றி தனிப்படை அமைத்து தீவிர புலன் விசாரணை செய்து வருகிறார்கள். ஓடும் பஸ்சில் பணப்பெட்டி திருடு போனது பற்றி யதகவல் பொதுமக்கள் மத்தியல் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.