Skip to main content

பைக்கில் வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாய் கொள்ளை-போலீசார் விசாரணை

Published on 14/04/2023 | Edited on 14/04/2023

 

Robbery of Rs 25,000 kept on bike-Police investigation

 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகொண்டா பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சக்திவேல் (20). இவர் நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள யூனியன் யூனியன் வங்கியில் ரூபாய் 25 ஆயிரம் பணத்தை எடுத்து தனது இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு திருப்பத்தூர் வந்துள்ளார்.

 

அப்போது திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள  மொபைல் கடையில் தனது செல்போனை பழுதுபார்த்துக் கொண்டிருந்த பொழுது, இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மூன்று மர்ம நபர்கள் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திலிருந்த ரூபாய் 25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

 

இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடு போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்