Skip to main content

சாலை வரி தொடர்பாக 6-ஆம் தேதி வரை நடவடிக்கை கூடாது! -தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Published on 30/06/2020 | Edited on 30/06/2020
chennai hc

 

சாலை வரி தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் வரும்  6-ம் தேதிவரை எடுக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், தமிழகத்தில் அனைத்து வாகனங்களும் முழு ஊரடங்கு உத்தரவால் இயங்கவில்லை.  இதனால்,  சாலை வரியை செப்டம்பர் மாதம் வரை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்  எனக்  கேட்டுக்கொண்டிருந்தனர். 

 

இந்த வழக்கு,  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,  தமிழக அரசின் சார்பாக  கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி,   பதில் அளிக்க இரண்டு வார கால அவகாசம்  வேண்டும் என்று கேட்டார். இதையடுத்து,  வழக்கு விசாரணையை நீதிபதி 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.  அதுவரை,   சாலை வரி தொடர்பாக அரசு எந்த ஒரு நடவடிக்கையும்  எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்