Published on 04/10/2021 | Edited on 04/10/2021
![Road blockade in Chidambaram condemning Priyanka Gandhi's arrest](http://image.nakkheeran.in/cdn/farfuture/TpXqxTXHki1VZc1zx-vZBj_gNLFlN_j9q2GJCa1YHxY/1633357018/sites/default/files/inline-images/k12_0.jpg)
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தைச் சந்திக்கச் சென்ற அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் .பிரியங்கா காந்தியைக் கைது செய்த உத்தரப்பிரதேச அரசைக் கண்டித்தும், உடனடியாக பிரியங்கா காந்தியை விடுதலை செய்யக்கோரியும் சிதம்பரம் காந்தி சிலை அருகே தமிழ்நாடு காங்கிரஸ் நகர கமிட்டி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பழனி என்கிற பாலதண்டாயுதம் தலைமை தாங்கினர். தொழிலதிபர் தேவாசுரேஷ் மாவட்ட துணைத்தலைவர் ஜி.கே.குமார் வழக்கறிஞர் செல்வகுமார். மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் அஞ்சம்மாள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சாலையில் அமர்ந்து ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து கோசங்களை எழுப்பினார்கள்.