ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேவைப்பட்டால் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது தமிழகஅரசு. அதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆலையை திறக்கக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஆலையை திறக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. அதனை அடுத்து ஆலை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில் ஆலையை திறக்க கூடாது என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை நிறுத்திவைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஆலையை மூடவேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடைவிதிக்கவும் மறுப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்தது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேவைப்பட்டால் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.