11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகளை இன்று காலை 9.30 மணிக்கு இணைத்தளத்தில் வெளியிட்டது அரசு தேர்வுகள் இயக்கம்.
கடந்த மார்ச் மாதம் 6 முதல் 22 வரை புதிய பாடத்திட்டத்தின் கீழ் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து 8.16 லட்சம் மாணவர்கள் 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர்.
இந்நிலையில் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டிருக்கிறது.
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாம் இடத்திலும், கோவை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவிகளில் 90.6 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மொத்த தேர்ச்சியில் மாணவர்களை விட மாணவிகள் 3.2 சதவிகிதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வெழுதிய 2,896 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 2,721 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 11 ஆம் வகுப்பு தேர்வெழுதிய 78 சிறைக்கைதிகளில் 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விருதுநகர்- 97.41%
தேனி-93.97%,
மதுரை-97.03%,
திண்டுக்கல்-96.24%,
நீலகிரி-94.87%,
திருப்பூர்-97.93%,
கோவை-97.67%,
ஈரோடு-98.03%,
சேலம்-95.93%,
நாமக்கல்-97.33%,
கிருஷ்ணகிரி-90.93%,
புதுக்கோட்டை-94.89%,
தருமபுரி-51.51%,
கரூர்-96.65%
அரியலூர்-92.84%,
பெரம்பலூர்-96.63%,
திருச்சி-96.93%,
நாகை-93.09%,
திருவாரூர்-93.44%,
தஞ்சை-95.85%,
விழுப்புரம்-91.21%,
கடலூர்-89.76%,
திருவண்ணாமலை-93.62%,
வேலூர்-89.29%,
காஞ்சிபுரம்-94.50%,
திருவள்ளூர்-94.39%,