Published on 09/08/2021 | Edited on 09/08/2021

பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு தலைமையில் 6 மாவட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களைச் சார்ந்த பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருச்சியில் உள்ள கலையரங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், அரசு தலைமை கொறடா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.