Published on 30/06/2023 | Edited on 30/06/2023

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இறையன்பு செயல்பட்டு வந்தார். இவர் இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனாவை நியமித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.
இதேபோன்று தமிழக டிஜிபியாக பொறுப்பு வகித்த சைலேந்திரபாபு இன்றுடன் பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில் தற்பொழுது சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக நியமிக்கப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்தின் தற்போதைய தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திர பாபு ஆகியோர் இன்றுடன் பணி ஓய்வு பெறுவதையொட்டி இருவருக்கும் சால்வை அணிவித்தும், பணிப் பாராட்டு கடிதத்தை வழங்கியும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.