ஆன்லைன் பத்திரப்பதிவால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பத்திர எழுத்தர்கள் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பாக இன்று வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மாலை 4 மணிக்கு திடீர் போராட்டம் நடத்தினர். இதில் 30 க்கும் மேற்பட்ட பத்திர எழுத்தர்கள் கலந்துக்கொண்டு அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலக வாயிலில் அனுமதியின்றி தினம் தினம் கமிஷனுக்காக குவிந்து வரும் புரோக்கர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதனை கலையவே ஆன்லைன் பத்திரபதிவு செய்ய முடிவு செய்து நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது அரசு. ஆனால் இதனை அதிகாரிகள் பெரும்பாலோனர் விரும்பவில்லை என்பது அவர்களது செயல்களே வெளிச்சமிட்டு காட்டுகின்றது என்கிறார்கள் பாதிக்கப்படும் பொதுமக்கள். அதுவே இப்படிப்பட்ட போராட்டங்கள் நடக்க காரணம் என்கிறார்கள்.
இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட அரசு இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.
- ராஜா