Published on 28/02/2019 | Edited on 28/02/2019

தமிழக அரசு பணிகளில் மண்ணின் மைந்தர்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பும், தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்கள், மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 சதவீத வேலைவாய்ப்பும் தமிழர்களுக்கே அளிக்க வகை செய்யும் வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இன்று (28-02- 2019) வியாழக்கிழமை மாலை 4.30 மணி அளவில் சேப்பாக்கம் சுற்றுலா வளர்ச்சி கழக கட்டிடம் அருகிலிருந்து கோட்டையை நோக்கி கோரிக்கை பேரணி நடைபெற உள்ளது. பேரணியின் முடிவில் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படவுள்ளது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.