வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனின் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்தின் கல்லூரி, பள்ளியில் வருமான வரித்துறையினர் சென்ற மாதம் 29 ஆம் தேதி இரவு மற்றும் 30 ஆம் தேதி காலை மேற்கொண்ட சோதனையில் 10.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை அறிவித்திருந்த நிலையில், அடுத்த நாளே அவரது நண்பரின் சிமெண்ட் குடோனில் நடந்தப்பட்ட சோதனையில் ரூபாய் 11.53 கோடி பணத்தை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
துரைமுருகனின் நண்பர் சிமெண்ட் குடோனில் மூட்டைகளிலும், அட்டைப்பெட்டிகளிலும் கட்டு, கட்டாக பணம் கட்டி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு மூட்டையிலும், பெட்டியிலும் வேலூர் தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண்கள் எழுதிவைக்கப்பட்டிருந்தது.
இந்த அதிரடி சோதனைக்கு பிறகு தற்போது இந்த இரு சோதனைகள் குறித்த அறிக்கையை வருமானவரித்துறை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.
அறிக்கையை ஆய்வு செய்தபின் தேர்தல் ஆணையம் இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.