![Corona for 5 doctors in Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/UgN11VT5NEZ5PFMh5vN0IBy978jq5k6QoX7LRBkW-9c/1589095597/sites/default/files/inline-images/sfsfdfd_3.jpg)
தமிழகத்தில் நேற்று மேலும் 526 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,535 ஆக அதிகரித்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்ட 526 பேரில் சென்னையில் மட்டும் 279 பேருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் மொத்தம் 3,330 பேருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 5 மருத்துவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 107 காவலர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக நேற்று தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் 5 மருத்துவர்களுக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் ஏற்கனவே மருத்துவர் ஒருவர் கரோனாவால் உயிரிழந்ததும், இன்று முதன் முதலாக சென்னையில் துப்புரவு பணியாளர் ஒருவர் கரோனாவால் உயிரிழந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.