Skip to main content

கலைஞர் நினைவிடத்தில் உறவினர்கள் அஞ்சலி!

Published on 10/08/2018 | Edited on 10/08/2018

 

மறைந்த திமுக தலைவர் கலைஞரின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

 

3-வது நாளான இன்று மாலையில் கலைஞரின் தனி செயலர் ராஜமானிக்கம் மற்றும் மு.க.தமிழரசின் மனைவி மோகன தமிழரசி, கலாநிதியின் சகோதரி அன்பு கரசி அஞ்சலி செலுத்தினார்கள்.  மேலும்,  செல்வியின் மகன் மற்றும் பேத்தி அஞ்சலி செலுத்தினார்கள்.  செல்வி, துர்கா ஸ்டாலின்,  கலாநிதி மாறன் அம்மா,  செல்வியின் உறவினர்கள் ஆகியோர் வந்து மலர் தூவி அஞ்சலி செய்தனர்.  அஞ்சலி செலுத்திவிட்டு சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து சென்றனர்.

 

s2s1

 

s3s5s4d1d2d3d4

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மெரினாவில் சீறிப் பாய்ந்த சொகுசு கார்கள்! மடக்கி பிடித்த போலீஸ் 

Published on 12/03/2023 | Edited on 12/03/2023

 

Luxury cars in the marina! The police who got wrapped up

 

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று காலை போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டதாக அதிநவீன சொகுசு கார்களை சென்னை போக்குவரத்து போலீஸார் பிடித்து அபராதம் விதித்தனர்.  

 

சென்னையைச் சேர்ந்த தனியார் கார் பராமரிப்பு நிறுவனம் தனது நிறுவனத்தின் ஒரு நிகழ்ச்சிக்காக வெளி மாநிலங்களைச் சேர்ந்த சொகுசு கார்களை சென்னைக்கு எடுத்துவந்தது. அந்த கார்களின் அணிவகுப்பு இன்று காலை சென்னை ஈ.சி.ஆரில் நடந்தது முடிந்தது. அதன்பிறகு அதில் ஆறு சொகுசு கார்கள், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் சீறிப் பாய்ந்தன. இதனைக் கண்ட காமராஜர் சாலையில் போக்குவரத்து கண்காணிப்பில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தி பிறகு அனைத்து கார்களுக்கும் அபராதம் விதித்தனர். 

 

பிடிப்பட்ட கார்களை காவல்துறையினர் காமராஜர் சாலையில் வரிசையாக நிறுத்தி வைத்தனர். இதனைக் கண்டு அங்கிருந்த மக்கள் அந்த விலை உயர்ந்த சொகுசு கார்கள் அருகே நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர். 

 

 

Next Story

பரவிய வதந்தி... மெரினாவில் போலீசார் குவிப்பு!

Published on 19/07/2022 | Edited on 19/07/2022

 

Re-mortem of the student's body... Police gathering in Marina!

 

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் முன்பு கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் தனியார் பள்ளியின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டது. அதேபோல் காவல்துறை வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. பல மணி நேரம் போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

இந்த சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 329 பேரில் 108 பேர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளி தரப்பில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள், தாளாளர், செயலாளர், ஆசிரியைகள் உள்ளிட்ட ஐந்து பேரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

மாணவி உயிரிழப்பு தொடர்பாக  தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் மறு  பிரேதப் பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி இன்று மாணவியின் உடல் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது இதற்காக மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் கீதாஞ்சலி (விழுப்புரம்), கோகுலநாதன்( சேலம்), ஜூலியான ஜெயந்தி (திருச்சி), ஓய்வுபெற்ற தடயவியல் துறை நிபுணர் சாந்தகுமார் ஆகியோர் இருக்கின்றனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தப்பட இருப்பதாக வதந்திகள் பரவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் பாதுகாப்பிற்காக 50 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.