சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரும் 9- ந்தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது. இதற்கு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிதம்பரம் நான்கு வீதிகளிலும் மரங்களில் உள்ள கிளைகளை வெட்டிஅப்புறப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கீழ வீதியில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் செல்வி ராமஜெயம் மருமகன் மருந்து கடை வைத்துள்ளார். இந்த கடையின் முன்பு உள்ள மரத்தின் கிளைகளை பாலகிருஷ்ணன் என்ற மின்சார ஊழியர் வெட்டி அப்புறப்படுத்தினார். அப்போது ஏன் என்னுடைய அனுமதி இல்லாமல் என் வாசலில் உள்ள மரத்தை வெட்டுகிறீர்கள் என்று முன்னாள் அமைச்சரின் மருமகன் சத்தம் போட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து செல்விராமஜெயத்தின் மருமகனின் தம்பி ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் முத்து உள்ளிட்ட ஐந்து பேர் கூட்டாக சேர்ந்து ஊழியர் பாலசந்தரை சரமாரியாக தாக்கியதாக கொலை மிரட்டல் விடுத்தனர் என்று மின்சார ஊழியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையத்தை மின்சார ஊழியர்கள் அனைவரும் முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் சாலை மறியலிலும் ஈடுபட முயற்சித்தனர். அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தினர். தாக்குதலுக்குள்ளான பாலகிருஷ்ணன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்கப்பட்ட பாலகிருஷ்ணன் கூறுகையில், எங்கள் உயர் அதிகாரியின் உத்தரவின்பேரில் நாங்கள் பணி செய்து கொண்டிருந்தோம் எங்களை முன்னாள் அமைச்சரின் உறவினர் ரமேஷ் என்னையும் உயர் அதிகாரிகளையும் கடுமையான வார்த்தைகளால் ஆபாசமாக திட்டினார். அவர்கள் உன்னால் என்ன செய்ய முடியும் முடிந்ததை செய்து பார் என்று கொலைமிரட்டல் விடுத்து நாங்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்று என்னை தாக்கினார்கள். இதுதொடர்பாக சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். நடவடிக்கை எடுக்கவில்லை. ஊழியர்களின் போராட்டத்தால் கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.