Skip to main content

காளிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

Reduction of water opening for Kalingarayan irrigation

 

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தைக் காட்டிலும் தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

 

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77.53 அடியாக சரிந்து உள்ளது. வினாடிக்கு 192 கன அடி வீதம் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடியும், கீழ் பவானி - பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 1,305 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்