தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பாசனத்திற்காக, மேட்டூர் அணை வரும் செவ்வாய்க்கிழமை அன்று திறக்கப்படவுள்ள நிலையில், கல்லணை கால்வாயில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கல்லணை கால்வாயில் 1,750 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர். கடந்த 2019- ஆம் ஆண்டு கல்லணை கால்வாய் சீரமைப்பு பணிகள் தொடங்கிய நிலையில், தற்போது வரை 40 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ளன.
மேட்டூர் அணை வரும் செவ்வாய்கிழமை அன்று திறக்கப்பட உள்ள நிலையில், சீரமைப்பு பணிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கிடையே, திருச்சி மாவட்டத்தில் கொடிங்கால், நந்தியாறு உள்ளிட்டவற்றில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு மழை காலத்தில் கோரையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் திருச்சி மாநகரில் புகுந்த நிலையில், இதனை தடுக்க இந்தாண்டு கூடுதல் நிதி ஒதுக்கீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றனர்.
திருச்சி மாநகரில் ஓடும் கோரையாறு, உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.