Skip to main content

பாப்பிரெட்டிபட்டி உட்பட 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரை

Published on 21/04/2019 | Edited on 21/04/2019

கடந்த பதினெட்டாம் தேதி தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தலும், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலு நடைபெற்று முடிந்த நிலையில் பாப்பிரெட்டிபட்டி உட்பட 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரை செய்துள்ளார்.

 

 Re-votting in 10 polling booths including poppyretipatti - Chief Electoral Officer of Tamil Nadu recommends

 

 

கடந்த 18 ஆம் தேதி நடந்த வாக்குபதிவின் போது தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி உட்பட 8 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு விரலில் மை வைத்த பின்னர் விரட்டிவிட்டு அவர்களது வாக்குகளை சிலர் கள்ள ஓட்டுக்களாக பதிவு செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதேபோல் பூந்தமல்லி மற்றும் கடலூர் வாக்குச்சாவடியிலும் முறைகேடாக வாக்குபதிவு நடந்துள்ளது எனவே மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என  அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

 

இந்த அறிக்கையை ஆதாரமாக வைத்து மத்திய தேர்தல் ஆணையத்தில் சம்பந்தப்பட்ட 10 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாஹு வலியுறுத்தியுள்ளார். இதனால் நாளை குறிப்பிட்ட 10 வாக்கு சாவடிகளில் மறுவாக்குபதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்