Skip to main content

ராட்சஷ ஆழ்குழாய் மூலம் தண்ணீர் விற்பனையை தடுத்த பொதுமக்கள் ! 

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

 

கடந்த சில வருடங்களாகவே ராஜீவ்நகர் மற்றும் மணப்பாறை நகரப் பகுதிகளில் பல இடங்களில் ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்குழாய் அமைத்து தண்ணீரில் ஒரு பெரிய குளம் போன்று அமைத்து அதில் நிரப்பி அதில் தண்ணீரை எடுத்து கொஞ்ச கொஞ்சம் கொள்ளை லாபத்திற்கு விற்று பெரிய அளவில் சம்பாதித்து வருகின்றனர். ராட்சஷ இயந்திரங்கள் கொண்டு தண்ணீர் தொடர்ச்சியாக எடுத்து கொண்டு வருதால் அதனை சுற்றி உள்ள குடியிருப்புப் பகுதிகளில் நீர்மட்டம் குறைந்து பொதுமக்கள் தண்ணீருக்கு பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

 

m


இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மதிமுக மாநில தேர்தல் பணிச்செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில் முற்றுகை மற்றும் மறியல் போராட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் சித்ரா, நகராட்சி ஆணையர் மனோகரன், காவல் துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

 

m

 

பேச்சுவார்த்தையின் முடிவில் உடனடியாக சட்டவிரோதமாக தண்ணீர் விற்ற தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி குடிநீர் விற்கக் கூடாது அதற்கு தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து நகராட்சி அலுவலர்கள் மின் மோட்டார்களை பறிமுதல் செய்து பாதாளக் கிணற்றை மூடினார்கள். வட்டாட்சியர் மோட்டார் அறையை பூட்டி சீல் வைத்தார்.

 

m

 

அதன்பின்பு பொதுமக்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தில் மினிக்கியூர் சதீஸ், மினிக்கியூர் முருகன், முத்துராஜா, கண்ணன், சுப்பையா, கிருஸ்ணமூர்த்தி, பரமன், ராதாகிருஸ்ணன், சிதம்பரம், முத்துக்குமார், பாண்டி, ஆட்டோ சேட்டு, ஹரீஸ் நடராஜன், ராஜராஜன், பழக்கடை நாகராஜன், அடைக்கலம் பூசாரி, அருணாச்சலம், மேஸ்திரி கதிரேசன், சரஸ்வதி, பாக்கியம், கௌசல்யா, தனம், தாஜீ மலர், பொன்னம்மாள், அகிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்