Published on 07/09/2018 | Edited on 07/09/2018
![po](http://image.nakkheeran.in/cdn/farfuture/g2FRLbskFMoBxS2sh6Q7cj2lpw-m7yWm9NxuWFiqeP4/1536343952/sites/default/files/inline-images/petta.jpg)
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. ’பேட்ட’ என்று புதிய படத்திற்கு தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரஜினிகாந்த் நடிக்கும் 165வது படமாகும். இப்படத்தின் மோஷன் போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார்.
![ra](http://image.nakkheeran.in/cdn/farfuture/26CVcQonE1Xx3leghOPzKN59xtpDMOTqdo8Q-9JMj0A/1536344764/sites/default/files/inline-images/rajini-petta%201.jpg)
இப்படத்தின் அறிவிப்பு வீடியோவில் அனுருத் இசை ரசிகர்களை கொண்டாட்ட வைத்திருக்கிறது. ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இப்படம் இருக்கும் என்று கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே கூறியுள்ளது குறிபிடத்தக்கது.
![po](http://image.nakkheeran.in/cdn/farfuture/V8HBpHhbZ8CS9rQ9sFX8c0msHu7VS2sKLNM-08-WX5g/1536344800/sites/default/files/inline-images/petta3.jpg)
![petta](http://image.nakkheeran.in/cdn/farfuture/wqQcLtcugCI-7SRM6PqxMCSN1sJuDpxgahxNOqfexFw/1536344822/sites/default/files/inline-images/petta%202.jpg)