ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டு 6 பேருக்கு பத்மவிபூஷன் விருதுகளும், 19 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இலக்கியம், கலை உள்ளிட்ட சேவைகளுக்காகத் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படவுள்ளது.
அதாவது தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின், சமையல் கலைஞர் தாமு, தாமோதரன், தட்சிணாமூர்த்தி, ராதாகிருஷ்ணன், தேவசேனாதிபதி ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் கலைத்துறையில் நடிகர் அஜித் குமார், நடிகை சோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, தினமலர் லட்சுமிபதி ராம சுப்பையார் ஆகியோருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் அஜித் குமாருக்கும், நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ரஜினிகாந்த் தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் கிளம்பி இன்று (28.01.2025) அதிகாலை சென்னைக்குத் திரும்பினார். அப்போது அவரிடம், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். அப்போது செய்தியாளர் ஒருவர் நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த ரஜினி, “வாழ்த்துகள்” என ஒற்றை வரியில் பதிலளித்து விட்டுச் சென்றார்.