Skip to main content

‘கஜா’வால் கரைந்த வாழ்க்கை..! காப்பாற்றிய ரஜினி..! (படங்கள்)

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

நாகை மாவட்டத்தில்  கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தினருக்கு மொத்தம் 18 லட்சம் செலவில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் சாவியை பயனாளர்களுக்கு இன்று ரஜினி வழங்கினார்.

 
கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின் பாதிப்பால் நாகை மாவட்டத்தில் பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர். முழுவதுமாக வீடுகளை இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோடியக்கரையில் நான்கு வீடுகளும், தலைஞாயிறு கிராமத்தில் 6 வீடுகளும் தலா ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டன. இந்த வீடுகளின் சாவிகளை இன்று முறையாக பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது. சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு நாகப்பட்டினத்தில் இருந்து வந்திருந்த பயனாளர்களுக்கு வீடுகளுக்கான சாவியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் வழங்கினார்.

 

சார்ந்த செய்திகள்