முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் அவர் ஜாமீன் பெறுவதற்கு மனு செய்திருந்த நிலையில் அவருடைய மனுவை விசாரித்த நீதிபதிகள் நேற்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி சிறையிலிருந்து காலை 10 மணிக்கு மேல் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ஏழு மணிக்கே வெளியே வந்தார். அவர் சிறையிலிருந்து வெளியே வந்தபோது அங்கு நான்கு கட்சி நிர்வாகிகளே இருந்தனர். அவர்களுடன் திருச்சி மத்திய சிறையில் இருந்து கார் மூலமாக விருதுநகருக்கு புறப்பட்டார். சிறையில் இருந்து புறப்பட்ட அவர், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, குளித்துவிட்டு, கட்சி வேட்டியில் அங்கிருந்து சரியாக ஒரு மணி நேரத்திற்கு பிறகு விருதுநகருக்கு புறப்பட்டுச் சென்றார்.