கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதி பிரச்சாரத்தின்போது கரூரைச் சேர்ந்த செந்தில் பாலாஜிக்கும் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் தமிழகத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையே முட்டல் மோதல்கள் ஏற்பட்டு அது தற்போது வரை பனிப்போராக நீடித்து வருகிறது. மின்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியை மற்றும் அவரது துறையை அண்ணாமலை பல்வேறு முறைகளில் விமர்சித்து வருகிறார்.
அதேபோல் செந்தில் பாலாஜியும் அண்ணாமலையை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் அண்ணாமலை கையில் கட்டியிருந்த வாட்ச் மற்றும் அதன் விலை, பில் ஆகியவை தொடர்பான பேச்சுக்கள் எழ பரஸ்பரம் அண்ணாமலையும் 640 ஏக்கர் நிலம், சாராய ஆலையில் பங்கு என விமர்சனங்களை தெரிவித்து வருகின்றார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டில் ' சத்திரபதி சிவாஜி 1967ல் சென்னை வந்தார்; 37 வயதுக்குள் படித்தது 20000 புத்தகம்; கணுக்கால் தண்ணீரில் டைட்டானிக் ட்ராமா; 9 வருட சர்வீஸில் 2 லட்சம் கேஸ்; 4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச்; இன்று, ரூ.345/- மெஷின் 10,000 ரூபாய். ஐம்புலன்களிலும் பெரும் பொய்களே.. காதுகள் பாவமில்லையா' எனப் பதிவிட்டுள்ளார்.
சத்திரபதி சிவாஜி 1967ல் சென்னை வந்தார்.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) December 22, 2022
37 வயதுக்குள் படித்தது 20000 புத்தகம்.
கணுக்கால் தண்ணீரில் டைட்டானிக் ட்ராமா.
9 வருட சர்வீஸில் 2 லட்சம் கேஸ்.
4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச்.
இன்று, ரூ.345/- மெஷின் 10,000 ரூபாய்.
ஐம்புலன்களிலும் பெரும் பொய்களே.. #காதுகள்பாவமில்லையா