Published on 22/11/2018 | Edited on 22/11/2018
மாமல்லபுரத்தில் 2 நாட்களாக தொடர்ந்து மழைபெய்து வருவதால் அங்குள்ள புரதான சின்னங்களான கடற்கரை கோயில், அர்சுனன்தபசு, புலிக்குகை, ஐந்துரதம் போன்ற பகுதிகளின் அருகே மழைநீர் குளம் போன்று தேங்கி நிற்கிறது.
மழைக்காலத்தில் இதுபோல் நீர் தேங்குவதால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அருகில் சென்று பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது எனவே உடனுக்குடன் மோட்டார் பம்ப் வைத்து நீரை வெளியேற்றி வந்த நிலையில் தற்போது பணியில் இருக்கும் உள்ளூர் தொல்லியல்துறை அதிகாரி இதை கண்டு கொள்வதில்லை. மத்திய மாநில தொல்லியல்துறை உயர் அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஐந்துரதம் முன் மழைநீர் தேங்கி நிற்கும் காட்சியை படத்தில் காணலாம்.