வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
7 மணிக்குள் தமிழ்நாட்டில் சென்னை உட்பட 27 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் பல இடங்களில் பரவலாக மழைபொழிந்து வருகிறது. எழும்பூர், சென்ட்ரல், சிந்தாதிரிப்பேட்டை, ராயப்பேட்டை மயிலாப்பூர், சாந்தோம்,மெரினா, திருவல்லிக்கேணி, மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், அம்பத்தூர், சேத்துப்பட்டு, சேப்பாக்கம், வடபழனி, அசோக் நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி ,பெரம்பூர், பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, மண்ணடி ஆகிய பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் சென்னை புறநகர்ப் பகுதிகளான செம்பரம்பாக்கம், பூவிருந்தவல்லி, திருமழிசை, திருவேற்காடு ஆகிய பகுதிகளிலும் மழை பொழிந்து வருகிறது.
விழுப்புரத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்து வருகிறது. விழுப்புரத்தில் வளவனூர், கண்டமங்கலம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, காணை, அரசூர் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்து வருகிறது.