தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகப் பரவலாக மழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, பெரம்பலூர், நாமக்கல், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், விழுப்புரம், கடலூர், ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கும், சென்னை, கிருஷ்ணகிரி, கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருவாரூரில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.