Skip to main content

மூன்று மணி நேரத்தில் 500 தடவை மின்னல் வெட்டியது: பீதியில் உறைந்த மக்கள்

Published on 14/03/2018 | Edited on 14/03/2018


 

nellai


வானிலை அறிக்கையின்படி இலங்கை அருகே மன்னார் வளைகுடா சமீபம் மையம் கொண்டிருந்த புயல், காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று மாறியது. குமரி மற்றும் மாலத்தீவு. லட்சத்தீவுப் பகுதிகளுக்கு நகர்ந்து மையம் கொண்டதோடு பலமான காற்றாக உருவெடுத்து வீசியதில் குமரி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக மழை. லேசான மழை முதல் சற்று அதிகமாக மழை வரை பெய்தது.
 

வறண்டு கிடந்த கோடையைச் சமாளிக்கிற வகையில் தவிக்கிற மனிதர்களின் தாகத்தினை சற்று தணிக்கிற வகையில் ஆறு தலைக் கொடுத்துள்ளது. குறிப்பாக மார் 13 அன்று நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் விடிய விடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்தது. மட்டுமல்லாமல், தென் மேற்குத் தொடர்ச்சி மலையில் நேற்றிரவு பெய்த இரண்டு மணி நேர கன மழையின் விளைவாக மக்களின் குடி தண்ணீர் ஆதாரமான சேர்வலாறு அணையின் நீர் மட்டம் 30 அடி, பாபநாச அணையின் நீர் மட்டம் 4 அடி மணிமுத்தாறு 2 அடி என்று அணைகளின் நீர் மட்டங்கள் உயர்ந்துள்ளன.

 

nellai


 

இது தவிர மலையிலுள்ள குற்றால அருவிகளில் நேற்றிரவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆர்ச்சைத் தாண்டி வெள்ளம் கொட்டுகிறது மெயின் அருவியில்.
 

அதே போன்று சிற்றாறு, செண்பகாதேவி அருவிகளிலும் நீர் கொட்ட, ஐந்தருவியில் ஐந்து அருவிகளிலும் தண்ணீர் விழத் தொடங்கியுள்ளது.
 

தற்போதைய மழை கோடை காலப் பயிர்களான கடலை, சோளம், உளுந்து போன்றவைகளின் சாகுபடிக்கு ஏற்றது என்கிறார் செங்கோட்டை பைம்பொழில் விவசாயியான செல்வம்.
 

அச்சன்புதூர், வடகரை பண்பொழி கணக்கப்பிள்ளை வலசை மேக்கரைப் பகுதிகளில் மூன்று மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. அந்த மூன்று மணி நேரத்தில் சுமார் 500 தடவைகள் கண்களைக் கூச வைக்கிற அளவுக்கு மின்னல் வெட்டியதால் இரவு முழுக்க சுற்றுப்புறக் கிராம மக்கள் பீதியிலும் பயத்திலும் உறங்கவில்லை என்கிறார் அச்சன்புதூரின் மீரான்கனி.
 

அதிர்ஷ்டம் எப்போதாவது தானே வலிய வந்து கதவைத் தட்டுகிறது.
 

 நெல்லை மாவட்ட  அணைகளின் நீர்மட்டம்.  
 

பாபநாசம்.: உச்சநீர்மட்டம் : 143 அடி நீர் இருப்பு : 32 அடி நீர் வரத்து :  2642.34 கன அடி வெளியேற்றம் 356  கனஅடி .

சேர்வலாறு. : உச்ச நீர்மட்டம்: 156 அடி நீர் இருப்பு : 49.54 அடி நீர்வரத்து : NIL வெளியேற்றம்: NIL

மணிமுத்தாறு. : உச்ச நீர்மட்டம்: 118 அடி. நீர் இருப்பு : 83.52 அடி. நீர் வரத்து : 110 கன அடி. வெளியேற்றம் :  110 கன அடி.

மழை அளவு : பாபநாசம். : 190 மி.மீ. சேர்வலாறு. : 102 மி.மீ மணிமுத்தாறு. : 67.6 மி.மீ கடனா நதி : 110 மி.மீ ராமா நதி : 130 மி.மீ கருப்பா நதி : 55 மி.மீ. குண்டாறு 98 மி.மீ. நம்பியாறு : 38 மி.மீ. கொடுமுடி ஆறு : 50 மி.மீ. அடவிநயினார் : 50 மி.மீ. அம்பாசமுத்திரம். : 66.9 மி.மீ. ஆய்குடி : 64 மி.மீ. சேரன்மகாதேவி : 46 மி.மீ. நாங்குநேரி : 60 மி.மீ. பாளையங்கோட்டை. : 45.2 மி.மீ. ராதாபுரம். : 13 மி.மீ. சங்கரன்கோவில். : 25 மி.மீ. செங்கோட்டை. : 101 மி.மீ. சிவகிரி. : 9.2 மி.மீ. தென்காசி. : 89.3 நெல்லை. : 31.3 மி.மீ.

செய்தி : படங்கள் : ப.இராம்குமார்
 

சார்ந்த செய்திகள்