கடந்த மாதம் செப்.12 ஆம் தேதி சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த ஐடி பெண் ஊழியர் சுபஸ்ரீ சாலையில் வைக்கப்பட்ட பேனர் சரிந்து லாரி மோதி பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மற்றும் அவரது மைத்துனர் மேகநாதன் ஆகியோர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இன்று அந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் அந்த பேனரை வைத்தது தாங்கள் இல்லை என்றும், தங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் வைத்த பேனர் என்றும், தாங்கள் இதற்கு காரணமில்லை என்றும் கூறியுள்ளனர். மனுவை முழுமையாக படித்துப்பார்த்த நீதிபதி நீங்கள் காரணமானவர்கள் இல்லையெனில் ஏன் இவ்வளவு நாட்கள் தலைமறைவாக இருந்தீர்கள். 12 நாட்கள் பிறகுதான் கைது செய்யப்பட்டீர்கள் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாத காரணத்தால் காவல்துறையில் சரணடைய முடியாத சூழல் நிலவியது ஜெயகோபால் தரப்பினர் எனக்கூறினர். அப்போது நீதிபதி உங்கள் வீட்டு மருமகளை வரவேற்க மற்றொரு வீட்டின் மகளை கொன்று விட்டீர்கள் என கருத்து தெரிவித்து இந்த வழக்கு குறித்து தமிழக காவல்துறை பதிலளிக்க கோரி வழக்கை நாளை மறுத்தினம் ஒத்திவைத்தார்.