தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே நரிக்குடி ஊராட்சியில் கடந்த பத்து தினங்களாக குடிநீர் தேக்க தொட்டியில் இருந்து கிராமங்களுக்கு குடிநீர் வரவில்லை என்று கூறி கிராம மக்கள் காலி குடங்களுடன் திருப்பனந்தாள் ஆடுதுறை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருப்பனந்தாள் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் திருப்பனந்தாள் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் .
கிராம மக்கள் குடிநீர் கேட்டு அதிகாரியிடம் முறையிட்டனர். "மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி மும்முனை மின்சாரம் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் மஞ்சள் நிறத்தில் குடி தண்ணீர் வருவதால் உபயோகிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் புதிய ஆழ்துளை கிணறு போட்டு சுத்தமான குடிநீர் வேண்டும் "என அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
அப்போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து இரு முனை மின்சாரம் வழங்கப்பட்டு உடனடியாக சரி செய்யப்பட்டு சீரான குடிநீர் வினியோகம் வழங்கப்படும் எனஉறுதி அளித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது.தேர்தலில் கவனம் செலுத்திய அரசாங்கம், பொதுமக்களின் குடிநீரில் கூட அக்கரை செலுத்தவில்லையே என பொதுமக்கள் குமுறுகின்றனர்.