சென்னையில் இருந்து மயிலாடுதுறை வரை செல்லும் விரைவு ரயிலில் கொண்டுவரப்பட்ட 75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் ரயில்வே காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில், பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்றபோது ஜிதேந்தர் குமார், டோலன் தாஸ் என்ற இரண்டு நபர்கள் தாங்கள் கொண்டுவந்த உடைமைகளில் ஒரு கிலோ 616 கிராம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொண்டு வந்துள்ளனர்.
அவற்றை ரயில்வே காவல்துறையினர் சோதனை செய்தபோது, மயிலாடுதுறையைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவருக்கு சொந்தமானது என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் மயிலாடுதுறை வருமான வரித்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் கொண்டு வந்த நகைகளை ஆய்வு செய்தபோது, அதன் மதிப்பு சுமார் 75 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அதற்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் அந்த நகைகளுக்கு உரிய வரி விதிப்பு 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு நகைகளை மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.