Published on 20/12/2021 | Edited on 20/12/2021
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரையடுத்து அவருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 15ஆம் தேதி சோதனை நடத்தினர். மேலும், இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ஏராளமான ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் ஊழல் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மீண்டும் தங்கமணிக்கு தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று (20.12.2021) காலை 6 மணிமுதல் சோதனை நடத்திவருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்களிலும், ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களிலும், சேலம் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.