
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்குச் சொந்தமான இடங்களில் நான்கு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், ஐந்தாவது நாளாக இன்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் துணையுடன் சோதனையானது தொடர்ந்து வருகிறது. அதேபோல் திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் வீட்டிலும் சோதனை நடைபெற்ற நிலையில் அங்கும் சோதனையானது ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து வருகிறது.
கோவை ராமநாதபுரத்தில் உள்ள திமுகவின் கலை இலக்கியப் பகுத்தறிவு நிர்வாகி மீனா ஜெயக்குமார் வீட்டிலும், சவுரிபாளையம் பகுதியில் உள்ள காசா கிராண்டா அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஐந்தாவது நாளாக திமுக பெண் நிர்வாகி மீனா ஜெயக்குமார் வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், கோவை வருமான வரித்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் நேரடியாக அவரது வீட்டுக்கே சென்று ஆய்வு மேற்கொண்டார். சுமார் ஒரு மணி நேரமாக ஆய்வில் இருந்த உதவி ஆணையர் கார்த்திகேயன் பின்னர் அங்கிருந்து சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.