Skip to main content

கீழடி அகழ்வாய்வு  திமுகவில் இருந்து துவங்கினால் தலைகுனிவு- பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து!

Published on 27/09/2019 | Edited on 27/09/2019

கோவை சாய்பாபாகாலனியில் பகுதியில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

காந்தியடிகளின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் பாஜக சார்பில் அக்டோபர் 2 முதல் மாதம் முழுவதும் பாதயாத்திரை நடைபெறும் என தெரிவித்தார். மேலும் இந்த பாதயாத்திரை உலகில் அதிக நபர்களை கொண்டு அதிக தூரம் கடந்த பாதயாத்திரையாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

 

Radhakrishnan comment!

 

இடைத்தேர்தல்களில் பாஜக பிரச்சாரம் செய்வது குறித்த கேள்விக்கு, அகில இந்திய தலைமை முடிவு செய்யும் எனவும், தற்போது பாதயாத்திரையில் கவனம் செலுத்தி வருகிறோம் எனவும், தங்களை பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்கிறது எனவும், கூட்டணி குறித்து துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பதிலளிக்காது பற்றி அதிமுகதான் பதில்சொல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை மாநில தலைமைதான் முடிவெடுக்கும் எனவும், தான் கருத்து சொல்ல முடியாது எனவும் அவர் கூறினார். மேலும்தான் விசாரித்தவரை புதுச்சேரி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெறுமென்பதே இப்போது உள்ள சூழ்நிலை என அவர் தெரிவித்தார்.

கீழடி அகழ்வாய்வு மூலம் வரலாறு தமிழகத்தில் இருந்து துவங்கும் என்பது மகிழ்ச்சி எனவும், ஆனால் அது திமுகவில் இருந்து துவங்கி விடக்கூடாது எனவும் கூறிய அவர், அப்படி நடந்தால் காலகாலத்திற்கும் தலைகுனிவாக மாறி விடுமென தெரிவித்தார்.

மோடி தமிழின் மீதும், தமிழர் மீதும் பற்று கொண்டவர் எனவும், கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட எந்த நாகரிகமாக இருந்தாலும் முழுமையாக ஆய்வு முடிவு வெளிவர மத்திய அரசு உறுதியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருக்கிறது என்றால், மாநில அளவில் நடந்த தேர்வுகளில் எவ்வளவு தவறுகள் நடந்திருக்கும் என கேள்வி எழுப்பிய அவர்,

இந்த விவகாரத்தில் தமிழக அரசு கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து குறித்த கேள்விக்கு, அதற்கு பயிற்சியை வழங்காமல் இருந்தால் சரி என கூறினார்.
 
 


 

சார்ந்த செய்திகள்