Published on 31/10/2024 | Edited on 31/10/2024
ஈரோடு, தாளவாடி மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகிறது.
இந்நிலையில் தாளவாடி அடுத்த செஷன் நகர் அருகே டி.எம்.எஸ் தோட்டம் அருகே சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதைக் கவனித்த தோட்டத்தின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்து இது குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வருவதற்குள் அந்த மலைப்பாம்பு மெதுவாக உயர்ந்து அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்றது. மலைப்பாம்பு நடமாட்டத்தால் கால்நடை வளர்ப்போர் அச்சமடைந்துள்ளனர்.