நீட்டுக்கு எதிராக.. புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரிக்குள் நுழைந்து போராட்டம் நடத்திய தோழர்கள்
நீட் தேர்வு மூலம் தேர்வான மாணவர்களுக்காண வகுப்புகள் இன்று தொடங்கியது. புதுக்கோட்டை புதிய மருத்துவக்கல்லூரியில் முதல் வகுப்பு தொடங்க விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. இ்ந்த விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர், அதி.மு.க மா.செ வைரமுத்து ஆகியோர் கலந்து கொள்வதாக இருந்தது.
நீட் டை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் நாம் தமிழர் கட்சி, டைபி மற்றும் பல்வேறு அமைப்புகள் இந்த திறப்பு விழா தகவல் அறிந்து மருத்துவக்கல்லூரியில் போராட்டம் நடத்தி திட்டமிட்டு தகவல் அறிந்து நுழைவாயிலில் தடுக்க காத்திருக்க. டைபி தோழர்கள் கல்லூரிக்குள் வரும் பேருந்துகளில் ஏறி கல்லூரிக்குள் சென்றுவிட்டனர். நாம் தமிழர் கட்சியினர் நுழைவாயிலில் தர்ணாவுடன் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் முதல் வகுப்பு தொடங்க விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க டைபி தோழர்கள் திடீரென விழா அறையை நோக்கி அணி அணியாக முழக்கமிட்டபடி செல்ல முயல விழா அறை கதவுகளை சாத்திக் கொண்டு பாதுகாத்தனர் போலீசார். இந்த தகவல் அறிந்து அமைச்சர், மா.செ உள்ளிட்டவர்கள் விழாவுக்கு வரவில்லை.
-இரா.பகத்சிங்