கஜா புயல் வெள்ளிக்கிழமை காலையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தை தாக்க தொடங்கியது. மணிக்கு 90 முதல் 110 கிலோ மீட்டர் வீசியதில் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பெரிய பெரிய மங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
புதுக்கோட்டை, கீரனூர், குண்டாற்கோவில், இலுப்பூர், அன்னவாசல், விராமலை, மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பழங்காலத்து மரங்கள் சாயந்தன. ராப்பூசல் என்ற ஊரில் 200 ஆண்டு பழமையான அரசமரம் காற்றில் முறிந்து விழுந்தது. மேலும் வாழை, நெல் மற்றும் சிறுதானிய பயிர்கள் பலத்த காற்றுக்கு நாசமாயின.
புதுக்கோட்டை நகர் பகுதியில் அனைத்து இடங்களிலும் உள்ள மரங்கள் முறிந்தும், வேறோடும் பெயர்ந்து விழுந்தது. கரம்பங்குடி ஒன்றியம், ஆலங்குடி ஒன்றியம், அறந்தாங்கி ஒன்றியம், கந்தவர்கோட்டை ஒன்றியத்தில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஒன்றியங்களில் தென்னை மரங்கள் மொத்தமாக அனைத்தும் புயலில் சாய்துள்ளது.
கந்தவர்கோட்டை பகுதியில் முந்திரி மரங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மீண்டும் முந்திரி மரங்களை கொண்டு வர இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என்றார்கள் விவசாயிகள். தென்னை விவசாயம், முந்திரி விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.