Published on 07/06/2021 | Edited on 07/06/2021

கரோனா காரணமாக இந்த ஆண்டு வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இந்தியா முழுவதும் நடத்த முடியாமல் போனது. இதனால் மாணவர்கள் தேர்வு நடக்குமா, நடக்காதா என்ற குழப்பத்தில் இருந்துவந்தனர். இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு ஒவ்வொரு மாநிலமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுவருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் (05.06.2021) 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், தற்போது புதுச்சேரியிலும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.