Skip to main content

புதுச்சேரி பான்லே ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Published on 01/12/2017 | Edited on 01/12/2017
புதுச்சேரி பான்லே ஊழியர்கள் வேலை நிறுத்தம்



புதுச்சேரி கிருமாம்பேட்டையில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிரந்தர, தொகுப்பூதிய தினக்கூலியாக பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் 8 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் நிரந்தர ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், 5 ஆண்டுகளுக்கு பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களை தொகுப்பூதீய ஊழியர்களாக மாற்ற வேண்டும், தினக்கூலி ஊழியர்களின் சம்பளத்தை 130லிருந்து 250 ரூபாயாக உயர்த்த வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 

பல கட்ட பேச்சுவார்த்தைகளிலும் சமரசம் ஏற்படவில்லை. அதையடுத்து பான்லே ஊழியர்கள் என்.ஆர். தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று காலை முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் சமரசம் பேசி வருகின்றனர்.

-சுந்தரபாண்டியன் 

சார்ந்த செய்திகள்