சேலம் அருகே, தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 20) நடந்தது.
தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு முடிவடைந்ததையொட்டி, ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை என்ற பெயரில் விளக்க பொதுக்கூட்டங்கள், தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அயோத்தியாபட்டணத்தில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், வெள்ளிக்கிழமை (மே 20) நடந்தது.
அயோத்தியாபட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமார் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பாண்டியன், தலைமை பேச்சாளர் வேலூர் கென்னடி, முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஒன்றிய பொறுப்பாளர்கள் தங்கசாமி, முருகேசன், பேரூர் செயலாளர்கள் செல்வம், ராமமூர்த்தி, பாபு என்கிற செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம், பெட்ரோல் விலை குறைப்பு, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை, ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு உள்பட கடந்த ஓராண்டில் அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள் குறித்து பேசினர்.