சென்னையில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து அரியலூர் மாவட்டம், செந்துறையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலின்போது பேசிய செந்துறை திமுக ஒன்றிய செயலாளர் மு.ஞானமூர்த்தி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அந்த தொகுதி மக்கள் நடத்திய போராட்டதை ஒடுக்குவதற்கு முயற்சி எடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த நிலைக்கு மாற்று நிவாரண முறை எடுக்க வேண்டும் என்பதற்காக திமுக செயல் தலைவர் ஸ்டாலின், முதல் அமைச்சரை சந்திக்க முதல்வர் அலுவலகத்திற்கு இன்று சென்றார். அங்கு சென்றதும் அவரை சந்திப்பதற்கு அனுமதி மறுத்தவுடன் அவர் அந்த அரங்கின் முன்பாகவே அமர்ந்து அறவழிப்போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார். காவல் துறை அவரை குண்டுகட்டாக தூக்கி வந்து வெளியில் விட்டு இருக்கிறார்கள். அதன் பிறகு அவர் நடத்திய அறவழி சாலை போராட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்கள் அனைவரையும் கைது செய்திருக்கிறார்கள். இதை அறிந்த செந்துறை ஒன்றிய திராவிட முன்னேற்றம் சார்பாக இன்று அண்ணா சிலை முன்பாக சாலை மறியல் செய்தோம். உடனடியாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுகவினர் விடுதலை செய்யபட வேண்டும்.
அதுபோல தூத்துக்குடியில் இந்த துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர்களை உடனடியாக விசாரணை செய்து அவர்கள் மீது வழக்கு தொடுத்து கைது செய்ய வேண்டும். இந்த ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த கோரிக்கையை மக்கள் கோரிக்கையாக ஸ்டாலின் முன்னெடுத்திருக்கிறார்கள். இதை இந்த அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். இதனை வலியுறுத்தி தான் செந்துறையில் இன்று சாலை மறியல் நடந்தது. நாளை மாவட்ட தலைநகரமான அரியலூரில் மாவட்ட கழக செயலாளர் சிவசங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டமும் கடை அடைப்பும் நடைபெற உள்ளது என்றார்.
சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ஆர். விசுவநாதன், மாவட்ட பொரியாளர் அணி. துணைஅமைப்பாளர் சிவ. பாஸ்கர், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பி. ஆர். பாண்டியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சின்னத்தம்பி, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் கலையாரசன், ஒன்றிய பொருப்புக்குழு உறுப்பினர்கள் வி. எழில்மாரன், வி. பி. நாடேசன், காளமேகம் ஆனந்தவாடி ஊராட்சி செயலாளர் கே. சி. பொன்னுசாமி, சோழன்குடிக்காடு ஜெயராமன், இலங்கைச்சேரி பாலு, பூமுடையான்குடிக்காடு ஆசைத்தம்பி, துளார் ஜெய்க்குமார், செந்துறை அகிலன், க. வேலு, அண்ணாமலை , ஆனந்த், முத்து, சேடக்குடிக்காடு மணி, செல்வம், அயன்தத்தனூர் வெற்றிச்செல்வன், கனகசபை, மாரிமுத்து, உஞ்சினி சேட்டு, கஞ்சமலைப்படி தமிழ்ச்செல்வன், இலைக்கட்பூர் கலைவாணன் , ஆர். எஸ். மாத்தூர் ராஜா, பொன்பரப்பி நடராஜன், முருகானந்தம், பலமுருகன் மற்றும் பலர் கைதாகி செந்துறை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.