Skip to main content

தமிழகத்தில் சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

Published on 03/04/2022 | Edited on 03/04/2022

 

ுபர


தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அரசாணையில் தெரிவிப்பட்டிருந்தது.

 

தமிழக அரசின் சொத்துவரி உயர்வு தொடர்பான அறிவிப்புக்கு எதிர்கட்சியான அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பான பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி , '' திமுக அரசு மக்கள் தாக்குபிடிக்க முடியாத அளவுக்கு சொத்துவரியை 150 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. இன்று தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரமே பாதித்து நிலைகுலைந்திருக்கும் நிலையில் சொத்துவரியை உயர்த்தியது கண்டனத்திற்குரியது'' எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது இதுதொடர்பாக பேசியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்