Skip to main content

“கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” - அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Prompt action will be taken on the requests says Minister Kayalvizhi Selvaraj

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் காப்பாளர், நிர்வாக ஊழியர் சங்கம் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று (26.10.2023) சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நடைபெற்றது.

 

அப்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் காப்பாளர், நிர்வாக ஊழியர் சங்கம் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க.லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நல இயக்குநர் த.ஆனந்த், பழங்குடியினர் நல இயக்குநர் ச.அண்ணாதுரை, மற்றும் உயர் அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்