விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டு மதுரை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
அருப்புக்கோட்டை போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நிர்மலாதேவியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி முடிவு செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் மாஜிஸ்திரேட்டு, நிர்மலாதேவியை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார்.
இந்த நிலையில், பேராசிரியை நிர்மலா தேவியிடம் 3வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவியின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று 8 மணி நேரமாக சோதனை நடத்தினர்.