Skip to main content

நிர்மலா தேவி விவகாரத்தில் இன்னும் 50 பேர்... பட்டியல் வெளியிடப்போவதாக முருகன் கூச்சல்... BREAKING

Published on 31/10/2018 | Edited on 31/10/2018
nirmala-devi-issue


 

 

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முருகன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 

இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஆஜராக அவர் அழைத்து வரப்பட்டார். காவல்துறையினரின் வாகனத்தில் இருந்து இறங்கி, நீதிமன்றத்திற்கு உள்ளே போகும்போது, 
 

''இது ஒரு காட்டுத்தனமான அலிகேஷன். எஸ்.சி. என்ற ஒரே காரணத்திற்காக எனக்கு நீதி மறுக்கப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 50க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பட்டியலை வெளியிடுவேன். கொஞ்சம் பொருத்திருங்கள்'' என்று கூறியபடியே முருகன் சென்றார்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலாதேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை!

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

 

virudhunagar aruppukkottai court professor nirmala devi issues



கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் முருகன், கருப்பசாமி ஆஜரான நிலையில் நிர்மலா தேவி ஆஜராகவில்லை. இந்நிலையில் நிர்மலாதேவி சார்பில் நீதிமன்றத்தில் விடுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கை நவம்பர் 18- ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்று முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 

Next Story

நிர்மலா தேவி வழக்கு ஒத்திவைப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு 

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

 

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, உதவி பேராசிரியர் முருகன் ஆகியோரை இன்று ஆஜராகுமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
 

இந்த உத்தரவையடுத்து பேராசிரியை நிர்மலாதேவி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இந்த வழக்கில் உதவி பேராசிரியர் முருகன் இன்று ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை 16.09.2019க்கு ஒத்திவைத்து அன்றைய தினம் மூவரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.