வங்கி பணியிடங்களுக்கான நிரப்புதலில் உள்ளூர் மொழி கட்டாயம் என்ற நடைமுறையை உறுதி செய்க: ஜீ.ரா
வங்கி பணியிடங்களுக்கான நிரப்புதலில் உள்ளூர் மொழி கட்டாயம் என்ற நடைமுறையை உறுதி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வங்கி பணியிடங்களுக்கு ஊழியர்களை தேர்வு செய்யும் போது பிராந்திய மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் எனும் விதி தளர்த்தப்பட்டு உள்ளூர் மொழி முன்னுரிமை என்று தற்போது மத்திய பாஜக ஆட்சியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இது தமிழகத்தில் வங்கித் தேர்வுகளுக்காக தயாராகும் இளைஞர்கள் மத்தியில் குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வரும் சூழலில், வங்கிப் பணிகளில் தங்களுக்கான வாய்ப்பு பாஜக அரசால் பறிக்கப்படுவதாக தமிழக இளைஞர்கள் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் உள்ளூர் மொழி தெரியாதவர்கள் வங்கிப் பணிகளில் அமர்த்தப்படுகிற போது சாதாரண மக்கள் வங்கிச் சேவையை பெறுவதில் பெரும் நடைமுறை சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். எனவே வங்கிப் பணிக்கான ஊழியர்கள் தேர்வில் பிராந்திய மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதியை மீண்டும் செயல்படுத்த மத்திய பாஜக அரசு உடனடி நடவடிக்கை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
தமிழக அரசு இந்த பிரச்சனையில் தலையீடு செய்து தமிழ்மொழி தெரிந்தவர்களைக் கொண்டே தமிழகத்தில் வங்கிப் பணியிடங்கள் நிரப்பப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.