Skip to main content

வெயில் தாக்கத்தால் முடங்கிபோன தென் மாவட்ட மக்களின் இயல்பு நிலை

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் வெப்ப நிலை உயருமென வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.

 

sun


 
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் எனவும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 

இதனால் இளநீா், நொங்கு, பழக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகியுள்ளது. இதில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வாட்டி வதைக்கிறது. மேலும் அனல் காற்றில் இருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் முகத்தை முடியபடி செல்கின்றனர். சாலையோரங்களில் மோர் மற்றும் கூழ் விற்பனை களைகட்டியுள்ளது. 

 
திருச்செந்தூா், விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொளுத்திய வெயில் காரணமாக சாலைகளில் கானல் நீா் தோன்றியது. மேலும் வெயிலின் தாக்கத்தால் நெல்லையில் அச்சப்பட்டு பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியதால் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. 

              
வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் கோடை வெயில் உக்கிரத்தில் முடங்கியே கிடக்கிறது. இதில் வெயில் ஓரு பக்கம் மக்களை வாட்ட இன்னொரு பக்கம் குடிநீா் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் இன்று மாலை (12-ம் தேதி) கண்ணாமூச்சி காட்டும் விதமாக குமரி மற்றும் நெல்லையில் உள் பகுதியில் லேசான  சாரல் மழை தூறல் விட்டு மக்களுக்கு டாட்டா காட்டி சென்றது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்