சென்னையில் உள்ள தனியார் தடகள பயிற்சி பள்ளியில் தடகளப் பயிற்சியாளர் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனியார் தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்தாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூக்க மாத்திரை சாப்பிட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பயிற்சியாளர் நாகராஜனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடகளப் பயிற்சியாளர் நாகராஜனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது. காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமியின் கைபேசி எண் 9444772222 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் அளிப்பவர்கள் ரகசியம் காக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.