திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பதவிக்கு 4வது முறை தலைவராக தேர்வு செய்யப்பட்ட டி.பாண்டியனுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் டிடி.85 காந்திகிராமம் நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலையில் நடைபெற்ற தேர்தலில் தலைவராக டி.பாண்டியன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். காந்திகிராமம் பல்கலைகழகத்தில் அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் தொடர்ந்து மூன்று முறை கூட்டுறவு பண்டகசாலை தலைவராக தேர்வு செய்யப்பட்டு வருகிறார். இவர் திமுகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவராக தேர்வு செய்யப்பட்ட டி.பாண்டியன் அது குறித்து கூறுகையில், 1990-96ல் பண்டகசாலை உதவி தலைவராகவும், 1996-2001ல் தலைவராகவும், 2013-18ல் தலைவராகவும், 2018ல் மீண்டும் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். காந்திகிராமம் பல்கலைக்கழகம், காந்திகிராம அறக்கட்டளை காந்திகிராமம் கதர் அறக்கட்டளை, அண்ணா நகர், கஸ்தூரிபா மருத்துவமனை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காந்திகிராமம் கூட்டுறவு பண்டகசாலையில் உறுப்பினராக உள்ளனர். 1320 உறுப்பினர்கள் கொண்ட இந்த பண்டகசாலையில் பொதுமக்களுக்கு நியாயமான முறையில் ரேசன் பொருட்களை தொய்வில்லாமல் வழங்கி வந்ததால் என்னை தொடர்ந்து மூன்று முறை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்றார்.
தொடர்ந்து மூன்று முறை தலைவராக தேர்வு செய்யப்பட்ட டி.பாண்டியன் அப்பகுதி மக்களால் மீசை பாண்டியன் என்று அன்பாக அழைக்கப்படுவார். அவருக்கு தேர்தல் அதிகாரி சசிகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். டி.பாண்டியனுக்கு டிடி.85 காந்திகிராமம் நுகர்வோர் பண்டகசாலை செயலாளர் ரவி, உதவி தலைவர் பி.முருகன், நிர்வாக குழு உறுப்பினர் எம்.பொன்னுச்சாமி, மல்லை நடராஜன், டாக்டர் முருகேசன், ஆர். லோகநாதன், எம்.இளஞ்செழியன், மாரியம்மாள் துரைப்பாண்டி, எம்.கார்த்திகதேவி, ஜெ.தேவிகா, பி.ஆறுமுகம் மற்றும் முன்னாள் செயலாளர் ராமசாமி, பல்கலைக்கழக ஊழியர்கள், உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.